மூன்று நிமிடத்திற்கு பத்து கோடியா? தனுஷ் ஒரு சைக்கோ- நயன்தாராவுக்கு ஆதரவாக களம் இறங்கிய சுசித்ரா!!

Singer Suchitra:நயன்தாராவுக்கு   ஆதரவாக  பாடகி  சுசித்ரா  நடிகர் தனுஷ்க்கு   எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

நடிகை நயன்தாரா தனது வாழ்க்கை தொடர்பான ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வந்தார். அதில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன்  தனக்கு  காதல் ஏற்பட வாய்ப்பாக இருந்த “நானும் ரவுடிதான்” படப்பிடிப்பு காட்சிகள் இடம் பெற விரும்பி இருக்கிறார்.  இப்படத்தை தனுஷ் தயாரித்து இருந்தார்.அந்த படப்பிடிப்பின்  போது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட மூன்று நிமிட வீடியோ கிளிப் பயன்படுத்தி இருந்தார்.

அந்த மூன்று நிமிட வீடியோ கிளிப் பயன்படுத்த தனுஷ் காப்பு உரிமை வழங்க  பத்து கோடி கேட்டு இருக்கிறார் என பகிரங்கமாக குற்றச்சாட்டை கடிதத்தின் மூலம்  சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார் நயன்தாரா.  இதற்கு ஆதரவாக  ஐஸ்வர்யா ராஜேஷ், அனுப்பமா, ஸ்ருதிஹாசன் மற்றும் நஸ்ரியா நசீர் உள்ளிட்ட நடிகைகள் தங்களுடைய ஆதரவாக அந்த பதிவிற்கு  லைக்குகள் செய்து இருக்கிறார்கள்.

மேலும் நடிகர் தனுஷ்க்கு ஆதரவாகவும் பல திரைப் பிரபலங்கள் தங்கள் பதிவை வெளியீடு வருகிறார்கள். இந்த  நிலையில் தான்  பாடகி சுசித்ரா நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியீடு இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் நடிகை சுசித்ர தனுஷ் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக வெளிப்படையாக அறிவித்து இருந்தார்.

மேலும் தனது கணவர் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ்  ஆகிய இருவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என பகிரங்கமாக சொல்லியிருந்தார். தற்போது நயன்தாராவுக்கு ஆதரவாக கருத்து  தெரிவித்துள்ளார்.   அந்த பதிவில் நடிகர் தனுஷ்,  அவரை பிடிக்காதவர்களுக்கு  அந்தரங்க தொல்லை, சிலருக்கு தொழில் ரீதியாக  தொல்லை, என தொல்லை கொடுத்தார்.

மேலும் “தனுஷ் ஒரு சைக்கோ என்றும் அவர் கொடுக்கும் டார்ச்சர்கள் வித்தியாசமானதாக இருக்கும் என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். பாடகி சுசித்ரா இவ்வாறு பொதுவெளியில் தனுஷ்  மீது குற்றச்சாட்டுகள் வைப்பது கண்டிக்கத்தக்கது என தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.