DMDK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் விஷயம், தவெக, பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை காட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான். தற்போது தவெக அதிமுக உடன் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பாமகவும் அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் தேமுதிக யார் பக்கம் செல்வதென்று தெரியாமல் யோசித்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவுடன் ஏற்பட்ட ராஜ்யசபா சீட் பிரச்சனை காரணமாக அதனுடனான உறவு முறிந்தது. அதனால் பிரேமலதா மீண்டும் அதனை வலியுறுத்துவதாக தகவல் வந்துள்ளது. மேலும் அதிக தொகுதிகளையும், 8 எம்.எல். களையும் தருவதற்கு யார் சம்மதிக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதில் பிரேமலதா தெளிவாக உள்ளார் என்றும் தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த கோரிக்கையை அதிமுக, திமுக என இரண்டு பக்கத்திலும் தெரிவித்துள்ளதாகவும், இந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதனால் தான் தனது கூட்டணி முடிவை பிரேமலதா ஜனவரியில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் அதிமுக கூட்டணி தற்சமயம் வலுப்பெற்று வருவதை உணர்ந்த பிரேமலதா, அதிமுக விடம் வைக்கப்பட்ட கோரிக்கையை விட திமுகவிடம் அதிகம் கேட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக கூட்டணி பலமடைந்து வருவதால் திமுகவும் பிரேமலதாவின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.