பாஜக, திமுக அரசை  சீண்டிய விஜய்!!  தவெக செயல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!!

Photo of author

By Sakthi

politics:தமிழக வெற்றிக் கழக செயல் கூட்டத்தில் விஜய் தலைமையில்  மத்திய,மாநில அரசுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  கூட்டம்  நடைபெற்றது.  இக் கூட்டத்தில்  தவெக  கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் . இக் கூட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக அதில் மின்சாரம், பால் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயர்தி மக்களின் பொருதாளரா நிலையை கேள்வி குறியாக்கி உள்ள தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும்   ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பொய்களின் பட்டியலை தேர்தலில் அறிக்கையாக தயாரித்து மக்களை  ஏமாற்றியது தான் திமுக அரசு.

மேலும், மகளிர் உரிமைத் தொகை , பரிசுத் தொகுப்பை  ஒரு புறம் கொடுத்து விட்டு மறுபுறம் மதுக்கடைகளை  திறந்து வருவாயை பெருக்குவது ஏற்புடையதல்ல  எனவே மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .  மேலும் பாஜக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு  மருத்துவம் மாநிலப் பட்டியலில் உள்ளது போல கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

நீட் தேர்வினை விளக்க வேண்டும். 3ம் மொழியை திணிக்கும் முயலும் மத்திய அரசின் கனவு எக்காலத்திலும் நிறைவேறாது என மத்திய மாநில அரசை கண்டிக்கும் வகையில் தவெக கட்சி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.