நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பரவலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக பதிவு!

0
172

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,554 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,554 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,44,90,283 எனது பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,322 பேர் இந்த நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்ததால் இந்த நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,39,13,294 என பதிவாகியிருக்கிறது தற்சமயம் 48,850 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்த நோய் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் மரணமடைந்ததால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,28,139 என அதிகரித்திருக்கிறது நாட்டில் இதுவரையில் 214.77 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசேலம் போலீசார்க்கு தலா ரூ 50 ஆயிரம் அபராதம்! மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!
Next articleகுளிப்பதற்காக சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்! பதறிப்போன பெற்றோர் செய்த செயல்!