வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் !!

0
175
#image_title

வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் !

தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற புதிய படம் இயக்கியுள்ளார். சிவகர்த்திகேயன் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார்.

தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. முதல் பாடல் பரத் சங்கர் இசையமைப்பில் அனிருத் பாடியுள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகிவருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார் இவர் மட்டுமின்றி யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின் ஆகிய நடிகர்களும்  நடித்து உள்ளார்கள்.  ஜூலை14 ஆம் தேதியில் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் இரண்டாம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளதாக இணையதளத்தில் தகவல் பரவிவருகிறது. மேலும் வண்ணாரபேட்டையில என்ற பாடல் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

 

 

author avatar
Preethi