செயல்படாத பொருளும்: பிரதமரும் ஒன்றுதான்! ராகுல் காந்தி காட்டம்!

Photo of author

By Hasini

செயல்படாத பொருளும்: பிரதமரும் ஒன்றுதான்! ராகுல் காந்தி காட்டம்!

Hasini

Inactive object: The Prime Minister is one! Rahul Gandhi show!

செயல்படாத பொருளும்: பிரதமரும் ஒன்றுதான்! ராகுல் காந்தி காட்டம்!

கடந்த இரண்டு வருடங்களாக சிறிது சிறிதாக பரவ ஆரம்பித்த கொரோனா என்ற கொடிய வைரஸ் அதன் இரண்டாம் அலையில் பல்வேறு துயரங்களை ஏற்படுத்தி வருகிறது.அதன் காரணமாக இந்தியா, டெல்லி, இங்கிலாந்து, உத்தர பிரதேசம் மற்றும் வட மாநிலங்களில் பல உயிரிழப்புகள் கட்டுகடங்காமல் சென்று கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் பல எதிர்பார்க்காத அளவுக்கு மரணங்கள் நிகழ்கின்றன.மயானங்களில் எரிஊட்ட கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதன் ஒரு பகுதியாக பி.எம்.கேர்ஸ் நிதியில் வாங்கப்பட்ட வேண்டிலேட்டர்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒன்று கூட செயல்படாமல் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.தற்போது பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்கள் கூற வேண்டிய கருத்துக்களை மக்களிடம் சென்று சேர வைத்துள்ள தகவல் பரிமாற்றங்கள்களை ட்வீட்டர் போன்ற இணையதளங்களை பயன்படுத்தி தெரிவிக்கின்றனர்.

அதை போல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது:

பி.எம்.கேர்ஸ் வென்டிலேட்டருக்கும், பிரதமருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டிலுமே அளவுக்கு மிஞ்சிய பொய் பிரசாரம் காணப்படுகிறது. வென்டிலேட்டரும் தனது வேலையை செய்ய தவறிவிட்டது. பிரதமரும் தனது வேலையை செய்யவில்லை. தேவையான நேரத்தில் இருதரப்பையும் கண்டுபிடிப்பது கஷ்டம். என்று கூறியுள்ளார்.