புதிய நாடாளுமன்றம் திறப்பு! 19 கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு!
புதிய நாடாளுமன்றம் கட்டிடம் திறப்பதற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் காங்கிரஸ், திமுக உள்பட 19 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் புதிதாக கட்டப்படடுள்ள நாடாளுமன்ற கட்டிடம் வரும் மே 28ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காத காரணத்தினாலும், ஹிந்து தேசியவாதி வி.டி சாவர்ககரின் பிறந்தநாளான மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் காரணத்தினாலும் எதிர்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்தது. இதையடுத்து திமுக, காங்கிரஸ் போன்ற 19 கட்சிகள் விழாவை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சிவசேனை(உத்தவ் தாக்கரே), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ராஷ்டிரிய ஜனதா தளம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கேரளா காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிஸ் லீக், தேசிய மாநாட்டு கட்சி, மதிமுக, புரட்சிகர சோஷலிசக் கட்சி ஆகிய 19 கட்சிகளும் கூட்டாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.