முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு!

0
165

முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு!

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகமது பாஷா என்பவர்.இவர் சேலம் டவுன் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். கரைம்பட்டியை சேர்ந்த சதீஷ் என்பவர் இவர் டீ கடைக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.சதீஷ் என்பவர் அடிக்கடி டீ கடைக்கு வருவதால் பாஷாவிருக்கும்,சதீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.ஆனால் சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி காந்தி சிலை அருகே டீ கடையை மூடிவிட்டு பாஷா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது,பாட்ஷாவை வழிமறித்து சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஒருவர் பாஷாவின் தலைப்பகுதியில் கல்லால் மிக கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்தார் பாஷா.இருப்பினும் அந்த கும்பல் பாஷாவை விடவில்லை அருகில் இருந்த கற்களை எடுத்து மீண்டும் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

உயிருக்கு போராடிய நிலையில் அக்கம்பக்கத்தினர் பாட்ஷாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில் தீவிர சிகிச்சையில் ஈடுபட்ட வந்த பாஷா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சதீஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் சதீஸ் உடன் வந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous articleவேலையின்மையால் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை ?
Next articleசெப்டம்பர் 8-ல் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகள் மேலும் விரிவாக்கப்படுமா?