புது வீட்டில் குடியேற இருந்த சமயத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீசார்!

Photo of author

By Hasini

புது வீட்டில் குடியேற இருந்த சமயத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீசார்!

கடந்த ஒரு வருடமாகவே பொது மக்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம், என்பது போல்தான் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது.ஆனால் நாம் தான் நம்மை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றி கொள்ள வேண்டும்.கஷ்டங்களே நமது அனுபவங்கள் என கடந்து போக வேண்டும்.

பெங்களூரூ நகரில் வசித்து வருபவர் விவேக் மதுசூதனன், இவருக்கு திருமணமான நிலையில் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.

மன வேறுபாடு காரணமாக மண வாழ்கையில் மனைவியை பிரிந்துவிட்டார்.மேலும் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த நிலையில் கோர்ட் மூலம் விவாகரத்தும் பெற்று விட்டார்.

இந்நிலையில், விவேக் புதிதாக வீடு வாங்க முடிவு செய்து இருந்தார்.அதன்படி விவேக்நகர், போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் கட்டி வரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கலாம் என தீர்மானித்தார்.

அதனை தொடர்ந்து விவேக் அந்த அடுக்குமாடி குடியிருப்பில்15 வது மாடியில் வீட்டை பார்க்க சென்று இருந்தார்.அங்கு சென்று நின்று கொண்டு இருந்தவர் திடீரென்று கீழே குதித்தார்.

விழுந்த வேகத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் உயிர் இழந்தார்.தகவலறிந்து அங்கு வந்த விவேக்நகர் போலீசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பற்றியும், எதற்காக தற்கொலை செய்தார் எனவும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.