முல்லை பெரியாறு அணை! கேரளாவிற்கு உபரி நீர் அதிகரிப்பு!

தமிழக மற்றும் கேரள மாநில எல்லையில் இருக்கின்ற முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 30-ஆம் தேதி அதிகாலையில் 142 அடியை எட்டியது இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டு இருக்கிறது, அணைக்கு நீர்வரத்து வருவதை பொருத்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டு வருகின்றது, இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, நீர்மட்டம் மீண்டும் 142 அடியை எட்டியது இதன் காரணமாக கேரளாவுக்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகாலையில், வினாடிக்கு 8000 கன அடியாக நிர்ணயிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வருடம் இதற்கு முன்பாகவே முல்லை பெரியாறு அணை தன்னுடைய முழு கொள்ளளவை எட்டியதால் தொடர்ந்து நீர் திறப்பு நடைபெற்றது தற்சமயம் மீண்டும் இந்த அணை தன்னுடைய முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் தற்போது மறுபடியும் நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

Leave a Comment