வைகையாற்றில் அதிகரிக்கும் நீர் வரத்து! நீர் வளத்துறையை விடுத்த எச்சரிக்கை!

0
158

சமீப காலமாக பருவமழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. அதோடு காவேரியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு இருக்கக்கூடிய அணைகள் மிக வேகமாக நிரம்பி வருவதால் கர்நாடக அணைகளிலிருந்து தமிழக காவிரியில் அதிகளவில் நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ,காவிரியாற்றில் அதிக அளவில் நீர் போக்குவரத்து இருக்கிறது.

இந்த நிலையில் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக, ஆற்றில் நீராடுவதற்கோ, இறங்குவதற்கோ, அனுமதி இல்லை என்று நீர்வளத்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது.

இதுகுறித்து நீர்வளத் துறையின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா பகுதியில் அமைந்திருக்கின்ற வைகை அணையில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆகவே இன்று காலை 8 மணியளவில் மொத்த கொள்ளளவான 71 அடியில் 70 அடி கொள்ளளவை எட்டவிருப்பதால் வைகை அணையிலிருந்து உபநீர் வைகை ஆற்றில் திறந்து விடப்படவுள்ளது.

ஆகவே திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ அல்லது ஆற்றில் நீராடுவதற்கோ முயற்சி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபெண்களுக்கு இந்த கருவி  பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் !!மருத்துவர்களை பாராட்டி வரும் உயர் அதிகாரிகள் !..
Next article“நான் ஓரினச்சேர்க்கையாளன்… “ வெளிப்படையாக அறிவித்த நியுசிலாந்து கிரிக்கெட் வீரர்!