ஆழியார் அணையில் மழையால் அதிகரித்த நீர்வரத்து! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அமைந்துள்ளது. இது கடல் போலக் காட்சி அளிப்பதனாலேயே ஆழியாறு என்று பெயர் பெற்றது. ஆனைமலையில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகளில் ஒன்றான ஆழியாறு ஆற்றில்  அணையை காமராசர் கட்டினார்.

1962 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. வால்பாறை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப்பகுதியானது பொதுமக்களுக்கு சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு உல்லாசப் படகுப் பயணமும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு புகழ் பெற்ற இந்த ஆழியாறு அணையில் தற்போது தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அணை முழுவதும் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக அணையில் நீர் திறந்துவிடப்பட்டது. அதிகளவு நீரின் காரணமாக வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக  இருப்பதால்  ஆற்றின் கரையோர பகுதி மக்களின் நலன் கருதி வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆழியார் அணையில் நீர்வரத்து மிகுதியால் அணையில் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில்  ஒரு வினாடிக்கு  1,225 கன அடி நீர் என்ற ரீதியில்  நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அணையில் உள்ள உபரி நீரானது திறந்துவிடப்பட்டுள்ளது.