காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! போரை நிறுத்த ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தல்! 

Photo of author

By Sakthi

காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! போரை நிறுத்த ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தல்!
காசாவில் நடந்து கொண்டிருக்கும் பேரால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா ஐ.நா சபையில் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் திடீரென்று தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் படையினர் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் படையினர் பிணயக் கைதிகளாக சிறைபிடித்து சென்றனர்.
இதையடுத்து பிணயக் கைதிகளை மீட்கும் வரையிலும் காஸா மீது எங்கள் தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்து இன்று வரையிலும் தாக்குதல் நடத்தி வருகின்றது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இன்று வரை 38000 பேர் பலியாகியிருக்கும் நிலையில் எங்கள் இலக்கை அடையும் வரை காஸா மீது போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதாவது இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட 240க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை விடுதலை மீட்க இஸ்ரேல் காஸாவின் சுங்கப்பாதைகள் மற்றும் அதன் வீரர்களை அழித்து பின்னர் அதன். தலைவரை அழித்து பணயக் கைதிகளை மீட்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்க இன்று வரை அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இஸ்ரேல் தவித்துக் கொண்டிருக்கிறது.
8 மாதங்களாக முயற்சி செய்யும் இஸ்ரேல் இலக்கை அடைய முடியாமல் காஸா மீது தாக்குதல்கள் நடித்தி வரும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா இது தொடர்பாக “காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும். போர் நிறுத்தத்திற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். எந்த வித மோதலும் தாக்குதலும் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலமாக இந்த போருக்கு தீர்வு காண வேண்டும். காஸா மீதான இஸ்ரேல் நாட்டின் போரை உடனே நிறுத்த வேண்டும். காஸா பிடித்து வைத்துள்ள பணயக் கைதிகள் அனைவரையும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.