TN GOV: போக்குவரத்து துறையில் ஏற்பட்ட 2,877 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் தினசரி போக்குவரத்துக் கழக பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் தமிழக அரசு அறிவித்த பெண்களுக்கு இலவச பேருந்து இன்னும் பயன்பெறும் வகையில் உள்ளது .
இந்நிலையில் அந்த சேவையில் வேலை ஆட்கள் குறைந்துவிட்டது. அதனைக்கொண்டு தமிழக அரசு அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் 2,877 காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. ஓட்டுநர் & நடத்துனர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் டிசிசி பணியில் 2,340 காலியிடங்களும், 537 தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதில் 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்பப் பணியாளர்கள் என்று மொத்தம் 769 காலியிடங்கள் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 2,108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தேவையான கல்வி தகுதி அடிப்படை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பிரிவிற்கு கலை, அறிவியல்,வணிகம்,மனிதநேயம் ஆகிய பாட பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.