ஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் இறுதியில் தந்தையை நினைத்து பெருமைப் பட்ட இந்திய வீரர்!

Photo of author

By Sakthi

என்னிடம் இருக்கும் போராட்ட குணம் என்னுடைய விவசாயம் புரியும் தந்தையிடமிருந்து வந்தது தான் என கிரிக்கெட் வீரர் தாகூர் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அந்த அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்கள் போன்றவற்றில் பங்கு கொண்டது. ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இரு அணிகளும் சமபலம் பெற்ற கிரிக்கெட் அணிகள் என்ற காரணத்தினால், ஒருநாள் போட்டியை இந்திய அணி கைப்பற்றியது அதேபோல டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஆட்டங்கள் தொடர்வதற்கு முன்னர் இந்த ஆட்டங்கள் தொடர்பாக கணித்து வைத்திருந்தனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் பேர் ஒருநாள்,மற்றும் டி20 போட்டிகளின் இறுதி முடிவு எதுவாக இருந்தாலும் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா அணி தான் கைப்பற்றும் சொந்த நாட்டில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியால் தொட்டுக்கூட பார்க்க இயலாது என்று தெரிவித்து இருந்தார்கள். அவர்களுடைய கணிப்பு படியே முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதோடு விராட் கோலியும் முதல் போட்டி முடிந்தவுடன் தன்னுடைய மனைவிக்கு பிரசவம் நடைபெற இருந்ததால், போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பினார். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நம்முடைய அணி இனி ஒரே ஒரு போட்டியில் கூட வெல்ல இயலாது என்று நினைத்திருந்தார்கள்.

ரசிகர்களின் மனநிலை இவ்வாறு இருந்த சமயத்தில், இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் பொறுப்பு கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட அஜிங்கிய ரஹானே, அந்த போட்டியிலேயே இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய வெற்றியை வாங்கிக் கொடுத்தார். அனுபவ வீரர்கள் என்று யாருமே இல்லாமல் இளம் வீரர்களை மட்டுமே அணியில் வைத்து விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிவுற்றது .இந்த நிலையில், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு துளியும் கிடையாது என்று நினைத்திருந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றியடைந்தது.

இந்த ஆட்டங்களில் ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அதில் இடம்பெற்றிருந்த இளம் வீரர்கள் கொண்டிருந்த போராட்ட குணம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், நடராஜன் ,அதோடு சிராஜ் ஆகியோரின் மனம் தளராத போராட்டமான ஆட்டமே இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றியை வாங்கிக் கொடுத்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக உரையாற்றியிருக்கிற இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாகூர், எனது தந்தை ஒரு விவசாயி அவரிடம் இருந்து வந்ததுதான் என்னுடைய போராட்ட குணம் என்று தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய தந்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்தது எல்லாம் தொடர்ச்சியாக முயற்சி செய்வது, எல்லா விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவது என்பதை மற்றும் தான். நான் விவசாயம் பண்ணியது கிடையாது. ஆனால் நான் ஆர்வம் கொண்ட கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான் நீடிப்பதற்கு நிச்சயமாக முயற்சி மேற்கொள்வேன் என்று தெரிவித்திருக்கிறார் தாகூர்.