இரண்டாவது t20 கிரிக்கெட் போட்டி! இலங்கைக்கு சவால் விடும் இந்திய அணி!

Photo of author

By Sakthi

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா முதல் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்து தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த இரு அணிகள் இடையில் இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் போட்டியில் இந்தியா முதல் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்து தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த இரு அணிகள் இடையில் இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

முதல் போட்டியில் 164 ரன்கள் சேர்த்த இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்கள் உள்ளிட்டோரின் பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது. அதே போல பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் இந்த போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை அவர் பாமிற்கு திரும்ப வேண்டியது அவசியம் என்று சொல்லப்படுகிறது.

தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் விரைவில் இங்கிலாந்து நாட்டிற்கு கிளம்புவதற்கு தயாராகி வருகிறார்கள். ஆகவே நேற்றைய ஆட்டத்தில் விளையாடி விட்டு கடைசி ஆட்டத்தில் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொருத்தவரையில் 20 ஓவர் உலகக்கோப்பை அணிக்கான இடத்திற்கு குறி வைத்துதான் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தங்களுடைய திறமையை வெளிக்காட்டுவதில் தீவிரமாக இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் குறைவாக தான் இருக்கிறார்கள் தொடக்க ஆட்டத்தில் கடைசி 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்னில் அந்த அணி சுருண்டு போனது. குறிப்பிட்ட ஒரு நான்கைந்து வீரர்களை தவித்து அந்த அணியில் மற்றவர்கள் பேட்டிங் சரியாக இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஏற்கனவே ஒருநாள் தொடரில் பறிகொடுத்துவிட்ட இலங்கை அணி 20 ஓவர் தொடரை வெல்வதற்கான முயற்சியில் ஈடுபடும் என்று தெரிகிறது. ஏனென்றால் யாராவது ஒருவர் நினைத்து நின்று ஆடினால் இந்தியாவிற்கு சவால் விடும் அளவிற்கு அந்த அணி ரன்களை குவிக்கலாம் இல்லாவிட்டால் திண்டாட்டம்தான் என்று சொல்லப்படுகிறது.