மகிழ்ச்சி! இந்தியாவில் மறுபடியும் 7000க்கு கீழே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் நோய் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அங்கிருந்து உலக நாடுகளுக்கு அந்த நோய் தொற்று பரவ தொடங்கியது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நோய்த்தொற்று.

முதலில் சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இந்த நோய் தொற்றினால் அந்த நாடு சற்று ஸ்தம்பித்து தான் போனது. நோய்தொற்று தீவிரமாக பரவி கொண்டிருந்த சமயத்தில் சீன அதிபர் நாங்கள் மிகப்பெரிய நெருக்கடி நிலையை சந்தித்திருக்கிறோம் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.

உடனடியாக மருத்துவமனைகள் உள்ளிட்டவை சீனாவில் ஏற்படுத்தப்பட்டது அதன் பின்பு இந்த நோய்த்தொற்று மற்ற நாடுகளுக்கு மெல்ல மெல்ல பரவத்தொடங்கியது. முதலில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு ஊடுருவியது இந்த நோய்த்தொற்று.

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது வரையில் தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியது அதனைத்தொடர்ந்து தற்சமயம் இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் வணிக வளாகங்கள் என்று அனைத்தும் செயல்பட தொடங்கியது. எடுத்து இந்திய மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், நாட்டில் நேற்று முன்தினம் 6,915 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது நேற்று இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து 24 மணி நேரத்தில் 7,554 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், இன்று புதிதாக 6561 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,561 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு 4,29,45,160 என்று அதிகரித்திருக்கிறது.

அதே போல நோய்த்தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 142 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதன் மூலமாக ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,14,388 என அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 14,947 பேரு குணமடைந்திருக்கிறார்கள் இதன் காரணமாக, குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,23,53,620 என அதிகரித்திருக்கிறது.

அதோடு இந்த நோய்த்தொற்று காரணமாக, 77,152 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டில் இதுவரையில் 1,78,02,63,222 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதற்கு நடுவே நாட்டின் நோய்தொற்று பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று ஒரே நாளில் 8,82,953 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரையில் ஒட்டுமொத்தமாக 77,00,50,005 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.