இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

Photo of author

By Sakthi

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி ஆரம்பம் ஆனது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் இந்தியாவின் முதல் இன்னிங்சை ஆரம்பித்தார்கள்.வலுவான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடி 126 ரன்களை நாற்பத்தி 3.4 ஓவர்களில் சேர்த்த போது தெரிந்தது ரோகித் சர்மா 83 ரன்னில் வெளியேறினார் இதனை தொடர்ந்து வந்த புஜாரா 9 ரன்னில் வெளியேறினார்.

இதை தொடர்ந்து களம் புகுந்த கேப்டன் கோலி மற்றும் லோகேஷ் ராகுல் ஜோடி மிகவும் அபாரமாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் தன்னுடைய 9ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் சேர்த்தது. 127 ரன்கள் குவித்த ராகுல் களத்தில் இருந்தார். இந்த நிலையில், 2-வது நாள் ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ராபின்சன் பந்துவீச்சில் லோகேஷ் ராகுல் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசி நிமிடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 40 ரன்களை சேர்த்தார். கடைசியில் இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 364 ரன்கள் சேர்த்தது.இங்கிலாந்து அணியின் சார்பாக ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மொயீன் அலி ஒரு விக்கெட் எடுத்தார் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்து விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரரான ரோடிபர்ஸ் 49 மற்றும் ஷிப்லி 11 ஆகிய ரன்கள் எடுத்து வெளியேறினார்கள் ஹமீது ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதன்பிறகு விளையாடிய ஜோ ரூட் 48 மற்றும் பேர்ஸ்டோ 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 2-வது நாள் ஆட்ட நேர இறுதியில் 45 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.

இந்த சூழ்நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் ஆரம்பமானது. பாஸ்டு அரைசதம் கண்டு 57 ரன்களில் ஆட்டம் இழந்தார். பட்லர் 23 மொயீன் அலி 27 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தார். கரன் ரன் எதுவும் எடுக்காமலும், ராபின்சன் 6 ரன்னிலும் மற்றும் 15 ரன்களிலும், ஆண்டர்சன் ரன் எதுவும் எடுக்காமலும், ஆட்டமிழந்தனர்.இதனையடுத்து நேற்றைய தினம் 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல் 5 மற்றும் ரோஹித் சர்மா 21 ஆகிய இடங்களில் ஆட்டம் இருந்தார்கள்.

இதனையடுத்து களமிறங்கிய புஜாரா 45 கோலி 20 ஆகிய ரன்கள் எடுத்து நடையை கட்டினார்கள். ஆனாலும் ரஹானே அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு ரிஷப் பண்ட் 14 மற்றும் இஷாந்த் ஷர்மா 4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்கள். ஜடேஜா 3 ரன்கள் எடுத்த போது ஸ்டெம்ப் அவுட்டானார்.

நான்காவது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 82 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்தியா 154 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. இன்று கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா விக்கெட் இழக்காமல் நிலைத்து நின்று விளையாடினால் இந்த ஆட்டம் டிராவில் முடிவதற்கான வாய்ப்பிருக்கிறது. விக்கெட்டுகளை இழந்ததால் இங்கிலாந்து அணி வெற்றிபெற சாதகமான சூழல் ஏற்படும்.