தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வரலாற்று சாதனையை நோக்கி கே.எல் ராகுல்!

Photo of author

By Sakthi

தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இதன்படி இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் இருக்கின்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார், அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் கே எல் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இருவரும் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சு சிறப்பாக எதிர்கொண்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

சிறப்பாக விளையாடி வந்த நயன்தாராவால் 60 ரன்னில் ஆட்டம் இழந்தார் இவரை தொடர்ந்து வந்த புஜாரா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக வந்த விராட் கோலி 35 ரன்கள் எடுத்த சூழ்நிலையில், ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய கே எல் ராகுல் சதம் கண்டார்.

இதன் மூலமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க நாட்டில் சதம் அடித்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் கே.எல். ராகுல் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்பாக 2006 மற்றும் 2007 உள்ளிட்ட ஆண்டில் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் வாசிம் ஜாபர் 116 ரன்கள் அடித்திருந்தார்.

இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ,உள்ளிட்ட மூன்று நாடுகளிலும் சதமடித்த வெளிநாட்டு தொடக்க ஆட்டக்காரர்களின் வரிசையில் சயீத் அன்வர், கிறிஸ் கெய்ல், உள்ளிட்டோருடன் தற்சமயம் கே.எல். ராகுல் இணைந்திருக்கிறார்.

அத்துடன் ஆசியக் கண்டத்திற்கு வெளியே அதிக சதம் அடித்த இந்திய தொடக்க வீரராக சுனில் கவாஸ்கர் 15 சதத்துடன் திகழ்ந்து வருகிறார். இந்த விதத்தில் அவருக்கு அடுத்த இடத்தை கே.எல். ராகுல் 5 சதம் அடித்து பிடித்து இருக்கின்றார். ஷேவாக் 4 சதங்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.

முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 90 ஓவர்களில் விளையாடி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்து இருக்கின்றது. கே.எல். ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும், களத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினம் இரண்டாவது நாள் ஆட்டம் மதியம் 1.30 மணி அளவில் தொடங்க இருக்கிறது.