திண்டாடும் நியூசிலாந்து அணி! வெற்றிக்களிப்பில் இந்தியா!

Photo of author

By Sakthi

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி ஆரம்பித்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் தனி ஆளாக எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். அதன் பிறகு தன்னுடைய முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் 62 ரன்னில் சுருண்டது நியூசிலாந்துக்கு பாலோ ஆன் வழங்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. நான்காம் தேதி ஆட்ட நேர இறுதியில் இந்தியா 6 விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்றைய தினம் மூன்றாவது நாள் ஆட்ட நேர தொடக்கத்திலிருந்தே இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. முதல் இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்தார், அவர் 62 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் அடித்து இருந்த சமயத்தில் டிக்ளெர் செய்வதாக அறிவித்தது. 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து நியூசிலாந்து அணி தன்னுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காத சூழ்நிலையில், 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மிட்சல் 60 ரன்கள் சேர்த்து அக்ஷர் பட்டேல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து இருக்கிறது இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருக்கின்ற சூழ்நிலையில், நியூசிலாந்து அணிக்கு கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தெரிகிறது.