அமெரிக்காவிலிருந்து நவீன ரக துப்பாக்கி ஆடர்;சீனாவுக்கு அடுத்த அடுத்த செக்?

Photo of author

By Pavithra

லடாக் பகுதியில் இந்திய-சீன எல்லைப் பிரச்சினை கடந்த சில மாதங்களாக நிலவி வருகிறது. இந்தியா,சீனாவின் மோதலுக்கு தயாராகும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிடம் இருந்து நவீன ஹெலிகாப்டரை வாங்கியது.அடுத்ததாக தற்போது இந்திய இராணுவம் அமெரிக்காவிலிருந்து 72,000 சிக் 716 தாக்குதல் துப்பாக்கிகளை வாங்க உள்ளது.

இந்த சிக் தாக்குதல் துப்பாக்கிகளுக்கான ஆர்டர்
ஏற்கனவே,ஆர்டர் செய்துள்ள, 
72,000 துப்பாக்கிகள் டெலிவரி செய்தவுடன் வழங்கப்பட உள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பல படுத்தும் வகையில் இந்திய ராணுவம் சிக் சாவர் தாக்குதல் துப்பாக்கிகளை முதன்முதலில் வாங்க உள்ளது.ஃபாஸ்ட் டிராக் கொள்முதல் (எஃப்.டி.பி) திட்டத்தின் கீழ் இந்திய ராணுவம் இந்த துப்பாக்கிகளை ஆர்டர் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.தற்போது பயன்படுத்தி வரும் இன்சாஸ் 5.56×45 மிமீ ரக துப்பாக்கிகளை மாற்றியமைக்கும் பணி படைப்பிரிவுகள் வாரியத்தால் உள்நாட்டிலே தயாரிக்கப்படும்.

மேலும் இதிட்டத்தின் படி, சுமார் 1.5 லட்சம் இறக்குமதி செய்யப்பட்ட துப்பாக்கிகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் செயலாற்றும் இராணுவ வீரர்களுக்கும், எல்லையில் காவல் பணியில் உள்ள வீரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

மீதமுள்ள படைகளுக்கு ஏ.கே.-203 துப்பாக்கிகள் வழங்கப்படும். இதனை ஆர்டினன்ஸ் தொழிற்சாலையில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரிக்கப்பட உள்ளன. என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.