சென்ற 2019 ஆம் ஆண்டு சீனா நாட்டில் முதல் முறையாக நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது இன்று அந்த நாட்டிலிருந்து உலகில் சுமார் 200 நாடுகளுக்கு மற்றும் பிரதேசங்களுக்கு இந்த நோய்த்தொற்று பரவியிருக்கிறது .
இந்த நோய் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டது அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, உள்ளிட்ட முக்கிய நாடுகள்தான் தற்சமயம் இந்த நோய் தொற்று பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், நாட்டில் தினசரி நோய்த்தொற்று பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதனடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,183 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பான் 44,877 ஐ விட குறைவாகும் என்று சொல்லப்படுகிறது..
இதன் காரணமாக, நாட்டில் 108 பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,26,65,534 என அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 91,930 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,16,77,641 என்ற அளவிலிருக்கிறது. நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,78,882 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இருந்தாலும்கூட நோய்த்தொற்று தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 346 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றால் பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,09,011ஆக அதிகரித்திருக்கிறது. அதேநேரம் நாடு முழுவதும் இதுவரையில் 172,95,87,490 தடுப்பூசி தவணைகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.