இந்தியாவில் 2000ஐ கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

0
100

இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் கடந்த 2 ஆண்டு காலமாக அதிகரித்து வந்தது இதன் காரணமாக, மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதோடு தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.

இப்படியான நிலையில், தமிழகத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதனால் நோய்த்தொற்று பரவல் சிறிது. சிறிதாக குறைய தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் திடீரென்று தற்போது இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவின் வடமாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதனடிப்படையில், இந்தியாவின் தினசரி நோய் தொற்று பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,927 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இது நேற்று முன்தினம் பாதிப்பான 2541 மற்றும் நேற்றைய பாதிப்பான 2483 விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே நாட்டின் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,30,65,496 என அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 2,252 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றிலிருந்து நலம் பெற்றோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,25,25,563 என அதிகரித்திருக்கிறது.

நாடு முழுவதும் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் 16,297 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோய்த் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இதன் காரணமாக. நாட்டில் நோய்த்தொற்று காரணமாக, உயிரிழந்தோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,23,654 என அதிகரித்திருக்கிறது.

அதேசமயம் நாடுமுழுவதும் இதுவரையில் 188,19,40,971 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Previous articleகுடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு! அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!
Next articleஹால் டிக்கெட் வந்திருக்கு ஆனால் பரீட்சை எழுத வேண்டாம்! மாணவருக்கு ஷாக் கொடுத்த பள்ளி நிர்வாகம்!