இந்தியாவிடம் அடிபணிந்த சீனா..!

Photo of author

By Pavithra

இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் சில நாட்களாக நடந்துவரும் நிலையில் மோடி மற்றும் சீன அதிபர்கள் பேச்சுவார்த்தைக்குப் பின் எல்லைபிரச்சனை படிப்படியாக குறைந்து வருகிறது.

லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே வீரர்களை திரும்பப் பெரும் செயல்களில் இரு நாடுகளும் இறங்கியுள்ளது. சீன துருப்புக்கள் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் திரும்பிச் சென்றதாகவும்,ஹாட் ஸ்பிரிங்ஸில் ரோந்து புள்ளி 17’இல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைகளின் பின்வாங்கல் முழுவதுமாக முடிந்தது என ராணுவத் துறையினர் கூறியுள்ளனர்.

ரோந்து புள்ளி-14,15மற்றும் 17ஆகியவற்றில் சீன வீரர்கள் முழுமையாக பின் வாங்கியதாகவும் கூறியுள்ளனர். ஃபிங்கர் பகுதியில் மட்டும் சில ராணுவ வீரர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு மந்திரி வாங் யியுடன் இரண்டு மணிநேர சந்திப்புக்குப் பின்னர், சீன ராணுவம் உடனடியாக பின்வாங்க ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புள்ளி-14,15 மற்றும் 17 மற்றும் 17 ஏ பகுதிகளில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்களிலிருந்து சீன துருப்புக்கள் பரஸ்பர பின்வாங்கல் ஒப்பந்தத்தின் கீழ், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திரும்பிச் சென்றது. இந்திய இராணுவமும் இந்த பகுதிகளிலிருந்து திரும்பிச் சென்றது. முன்னதாக இந்தியாவின் ரோந்துப் புள்ளிகளாக இருந்த பகுதிகளில் மே முதல் வாரம் சீனர்கள் கட்டமைப்பை உருவாக்காத தொடங்கினர்.

இருதரப்பு நாட்டு எல்லைப் பிரச்சினைகளை ஒரு தலைப்பட்சமாக முடிவு எடுக்கக் கூடாது என்றும் எல்லைப் பிரச்சனைகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மை கொலைக்கும் எந்தவொரு சம்பவத்தையும் எதிர்காலத்தில் தவிர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.