இந்திய கிரிக்கெட் அணி மிகப் பெரிய சாதனை படைக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் இலங்கை அணிக்கு எதிராக இந்திய ஏ அணி இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. அங்கே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது இந்த போட்டிகளில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு இலங்கைக்கு எதிரான ஒரு சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது இலங்கை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக ஒன்பதாவது தொடரை வெற்றி பெற்ற இந்திய அணி தயாராகி வருகிறது என்று சொல்லப்படுகிறது. நாம் சென்ற 2007ஆம் வருடம் முதல் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேருக்கு நேர் சந்தித்த தொடர்களில் இந்திய அணி தொடர்ச்சியாக எட்டு வெற்றிகளை பெற்றிருக்கிறது.
சென்ற 2007-ஆம் ஆண்டு முதல் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சூழலில், இலங்கை அணியுடன் நடைபெறும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒன்பதாவது முறையாக இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள்.
இதற்க்கு முன்னரே இந்திய அணி தொடர்ச்சியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10 தொடர்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் இருக்கின்றது. 1996 முதல் 2020ம் ஆண்டு வரையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்த அணி 11 தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருக்கிறது.
இதில் இரண்டாவது இடத்தில் நம்முடைய நாடு இருக்கிறது. முன்பே சொன்னது போல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 10 தொடர்களில் வெற்றியுடன் இருக்கிறது இந்திய அணி. 3-வது இடத்தில் தொடர்ச்சியாக ஒன்பது தொடர்களில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி இருக்கிறது. எதிரணி மறுபடியும் ஜிம்பாப்வே தான் அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 9 தொடர் வெற்றிகள் உடன் பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தையும், பிடித்து இருக்கிறது தற்சமயம் இதில் ஐந்தாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்பானது இந்தியாவிற்காக காத்திருக்கிறது.