இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 679 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது கடந்த 543 நாட்களில் இல்லாத அளவு குறைவு என்று சொல்லப்படுகிறது. தினந்தோறும் சராசரியாக 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் பரிசோதனை 7.83 சதவீதமாக குறைந்து இருந்தது இதுவும் தினசரி நோய் தொற்று பாதிப்பு எந்த அளவில் குறைவதற்கான ஒரு காரணமாக, பார்க்கப்படுகிறது. நேற்று அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 3 ஆயிரத்து 698 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில், நாட்டில் இதுவரையில் நோய் தொட்டால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 480 ஆக அதிகரித்திருக்கிறது.

நோய்தொற்று பாதிப்பால் கேரள மாநிலத்தில் 180 பேர் உட்பட நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 236 பேர் பலியாகி இருக்கிறார்கள், இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 147 ஆக அதிகரித்திருக்கிறது.

நோய்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 12202 பேர் குணமடைந்து வீடுதிரும்பி  இருக்கிறார்கள். இதுவரையில் குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 46 ஆயிரத்து 749 ஆக அதிகரித்திருக்கிறது.

தற்சமயம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கடந்த 536 தினங்களில் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 584 ஆக குறைந்திருக்கிறது இதில் கேரள மாநிலத்தில் 54 ஆயிரத்து 726 பேர் சிகிச்சைகள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் நேற்று இருபத்தி ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 154 தவணை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது இதுவரையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 117 கோடியே 63 லட்சத் தாண்டியிருக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 63.34 சதவீத கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 64 ஆயிரத்து 980 மாதிரிகளும் அடங்கும் என்று சொல்லப்படுகிறது.