நாட்டில் புதிதாக நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2500 ஐ கடந்தது!

0
111

இந்தியாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் நொத்தொற்று ஊடுருவியது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்த நோய் தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற தடுப்பூசி இந்த நோய் தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக திகழ்ந்து வருகிறது.

நோய்த்தொற்று பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்த நோய் தொற்று மெல்ல, மெல்ல குறையத் தொடங்கிவிட்டது இந்த நிலையில், இந்தியாவில் சற்றேறக்குறைய நோய்தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நோய்த்தொற்று பரவலின் முடிவு நெருங்கி வந்து கொண்டிருக்க கூடிய நிலையில், இன்று புதிதாக 2539 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற தகவலின்டிப்படையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2539 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதன் மூலமாக நோய்த்தொற்று பாதிப்பின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,30,01,477 என்று அதிகரித்திருக்கிறது.

அதேபோல இன்று நோய்த்தொற்று பாதிப்புக்கு ஒரு நாளில் பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக இருந்து வருகிறது. இதன் மூலம் பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,16,132 இன்று அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 4,491 பேர் விடுபட்டிருக்கிறார்கள் இதன் காரணமாக, குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,24,54,5486 என்று இருந்து வருகிறது.

அத்துடன் நோய் தொற்றுக்கு தற்போது 30,799 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நாட்டில் இதுவரையில் 1,80,80,24,147 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதற்கு நடுவில் நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று ஒரே நாளில் 7,17,330 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 78,12,24,304 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

Previous articleஇனி அரிசி ஒரு கிலோ ரூ 400! தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி!
Next articleதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா! காரணம் ஆன்மீகமா அரசியலா?