நாட்டில் திடீர் நோய்த்தொற்று பலி எண்ணிக்கை உயர்வு! காரணம் என்ன?

0
156

நாட்டில் நோய் தொற்றின் 3வது அலை தன்னுடைய முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது கடந்த 22 மற்றும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தினசரி நோய் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வந்தது.

நேற்று இந்த நோய்த் தொற்று பாதிப்பு நிலை மாறிப் போனது நேற்று முன்தினம் 1,938 பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதே சமயம் நேற்று 1685 என நோய்தொற்று குறைந்தது. இந்த சூழ்நிலையில், இன்று புதிதாக 1660 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது தகவலினடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1660 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,18,032 என்று அதிகரித்திருக்கிறது.

அதேபோல நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,100 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் நேற்றைய தினம் மற்றும் 83 பேர் பலியாகி உள்ளார்கள். இதன் மூலமாக பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,20,855 என அதிகரித்திருக்கிறது.

மராட்டிய மாநிலத்தில் விடுபட்ட எண்ணிக்கையில் 4,005 பெரும் மற்றும் கேரளாவில் எண்ணிக்கையில் 79 பேரும் இன்றைய நோய்தொற்று பாதிப்பில் சேர்க்கப்பட்டதுதான் இந்த உயர்வுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 2349 பேர் விடுபட்டிருக்கிறார்கள் இதன் காரணமாக. குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,24,80,436 என்று அதிகரித்திருக்கிறது.

அதோடு இந்த நோய் தொற்றுக்கு தற்சமயம் 16,741 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டில் இதுவரையில் 1,82,87,68,476 பேருக்கு நோய்தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,07,479 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதற்கு நடுவே நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று ஒரே நாளில் 6,58,489 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரையில் மொத்தமாக 78,63,02,714 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

Previous articleஜூன் மாதம் ஊரடங்கா? எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்!
Next articleஹவுதி கிளர்ச்சியாளர்களின் அட்டகாசம்! சவுதியில் கொழுந்து விட்டெரியும் எண்ணெய் கிடங்கு!