இந்தியாவில் ஒரே நாளில் 21 சதவீதம் குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது கடந்த 24 ஆம் தேதி 9 1283 பேருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 25ஆம் தேதி 9 ஆயிரத்து 119 பேருக்கும், நேற்று 10 ஆயிரத்து 549 பேருக்கும், நோய் தொற்று பாதிப்பு உண்டானது. இதில் 4 ஆயிரத்து 677 பேர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நாட்டில் இன்று மேலும் 8 ஆயிரத்து 318 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது, இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 ஆயிரத்து 318 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்த நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 63 ஆயிரத்து 749 ஆக அதிகரித்திருக்கிறது.

அதேபோல நோய்தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 465 பேர் பலியாகியிருக்கிறார்கள், இதன் மூலமாக உயிரிழந்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 67 ஆயிரத்து 933 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதிப்பிலிருந்து 10967 பேர் விடுபட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 88 ஆயிரத்து 797 ஆக அதிகரித்திருக்கிறது. இதன் மூலமாக குணமடைந்தவரின் விகிதம் 98.34 சதவீதமாக இருக்கிறது.

அதோடு நோய்த்தொற்று தற்சமயம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டில் இதுவரையில் 121 கோடியே 6 லட்சத்து 58262 பேருக்கு நோய் தொற்று தடுப்பு ஊசி போடப்பட்டு இருக்கிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73 லட்சத்து 58 ஆயிரத்து 17 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் நாட்டில் நோய்தொற்று பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று ஒரே நாளில் 9 லட்சத்து 69 ஆயிரத்து 354 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுவரையில் ஒட்டுமொத்தமாக 63 கோடியே 82 லட்சத்து 47889 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.