Weather:மழை பொழிவு பற்றிய புதிய தகவலை கொடுத்து உள்ளது, இந்திய வானிலை மையம்.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தமிழகத்தில் தொடங்கியது. தமிழத்தில் பரவலாக கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றுழுத்தத் பகுதி உருவாகி இருக்கிறது என்றும் மேலும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது தமிழகத்தை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
இதனால் வருகின்ற 7 ம் தேதி முதல் 11 ம் தேதி வரை தமிழக பகுதிகளில் கனமழைகக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்கக்களில், புதுவை மாநிலத்திலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையை பொருத்த வரையில் நகரின் ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, எழும்பூர், கிண்டி, வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்து உள்ளது சென்னை வானிலை மையம்.