மகிழ்ச்சி! நாட்டில் 15000க்கும் கீழே குறைந்த நோய் தொற்றுப்பாதிப்பு!

0
102

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1,48,359ஆக குறைந்தது.

நேற்று ஒரே நாளில் நோய் தொற்றிலிருந்து 30009பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில் இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,22,19,896 என உயர்ந்திருக்கிறது. நாட்டில் நோய் தொற்றிலிருந்து மீண்டும் வருவோரின் விகிதம் 98.46 சதவீதமாக இருக்கிறது.

நோய்த் தொற்று காரணமாக, ஏற்படுகின்ற உயிரிழப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 278 பேர் பலியான நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 302 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரையில் இந்த நோய் தொற்றால் பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,12,924ஆக அதிகரித்திருக்கிறது.

நாட்டில் இதுவரையில்176.52 கோடி தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30.49 லட்சம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 11,55,417 பரிசோதனைகள் செய்யப்பட்டன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous article‘வலிமை’ எனது திரை வாழ்வில் சிறந்த படம்!
Next articleஉக்ரைன் மீது போர் தொடுத்தது சோவியத் ரஷ்யா!