இந்தியாவில் நாள்தோறும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே தற்போது வடமாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்.
அதோடு இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களும் கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் தமிழகத்தைப் பொறுத்த வரையில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகின்ற சூழ்நிலையில், மீண்டும் அந்த நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்ற சமூக அக்கறையுடன் அனைவரும் முக கவசம் அணிவது எல்லோருக்கும் நல்லது என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில். நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,451 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக பாதிப்படைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,30,52,435 என அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 1,589 பேர் குணமடைந்திருக்கிறார்கள். ஆகவே நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,25,16,068 என அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 14,241 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், நடைபெற்ற தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 54 பேர் பலியாகியிருக்கிறார்கள் இதன் காரணமாக, இந்தியாவில் நோய் தொற்றால் பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,22,116 என அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18,03,558 பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1,87,26,26,515 என இருக்கிறது.