இந்தியாவில் மளமளவென சரிந்த நோய்த்தொற்று பாதிப்பு!

0
115

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்சமயம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது அதன் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,115 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த மதிப்பு 3 கோடியே முப்பத்தி ஐந்து லட்சத்து நான்காயிரத்து534ஆக அதிகரித்து இருக்கிறது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 252 பேர் இந்த நோய் தொற்றுக்கு பாதி பலியாகி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்த நோய் தொற்றுக்கு இதுவரையில் பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து 385 ஆக அதிகரித்து இருக்கிறது.

நோய் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரத்து 574 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 34 ஆயிரத்து 469 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். நாடு முழுவதிலும் இருக்கின்ற பல மருத்துவமனைகளில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 575 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாடு முழுவதும் நேற்று வரையில் பொதுமக்களுக்கு எண்பத்தி ஒரு கோடியே 85 லட்சத்து 13 ஆயிரத்து 827 தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

Previous articleபாஜக அதிமுக கூட்டணியில் குழப்பமா? அதிமுக எடுத்த அதிரடி முடிவு!
Next articleகோடநாடு வழக்கு! தேவைப்பட்டால் அதையும் செய்ய நாங்கள் தயார் காவல்துறையினர் அதிரடி!