இந்தியாவில் உயர்ந்த தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை!

Photo of author

By Sakthi

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் இருந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் ஆரம்பத்தில் இந்த நோயினை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஏனென்றால் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகள் எதற்கும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தனர்.ஆனால் மெல்ல, மெல்ல பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தொடங்கியதால் நோய்தொற்று குறைய தொடங்கியது.

இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அந்த அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 964 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதன் காரணமாக ஒட்டு மொத்த மதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 33 ஆயிரத்து 498 ஆக அதிகரித்திருக்கிறது.

அதிகபட்சமாக நேற்றைய தினம் கேரளாவில் 15768 பேரும், மகாராஷ்டிராவில் 3131 பேரும், தமிழ்நாட்டில் 1647 பேரும், மிசோரத்தில் 1355 பேரும், ஆந்திராவில் 1176 பேரும், பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள மாநிலத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்பு வரையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரமாக இருந்த சூழ்நிலையில், படிப்படியாக அந்த அளவு குறைந்து கடந்த இரண்டு தினங்களாக 16 ஆயிரத்திற்குள் இருக்கிறது.

அதேநேரம் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் தினசரி பாதிப்போ 500க்கும் இருந்த சூழ்நிலையில், அது படிப்படியாக அதிகமாகி நேற்றையதினம் 1300 தாண்டி இருக்கின்றது. நேற்றைய தினம் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக நான்காவது அதிக பாதிப்பு மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கிறது.

நோய் தொற்று காரணமாக, கேரளாவில் 214 பேரும், மகாராஷ்டிராவில் 70 பேரும், உட்பட நாடு முழுவதும் இதுவரையிலும் 381 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் இதன் காரணமாக ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து 768 ஆக அதிகரித்திருக்கிறது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 616 மற்றும் கர்நாடகாவில் முப்பத்தி ஏழு ஆயிரத்து 648 தமிழகத்தில் 35 ஆயிரத்து 379 பேரும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பை விட நாள்தோறும் குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அந்த இடத்தில் நேற்று நோய்த்தொற்றின் பிடியிலிருந்து 34 ஆயிரத்து 167 பேர் மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இதுவரையில் குணமடைந்த அவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 83 ஆயிரத்து 741 ஆக அதிகரித்திருக்கிறது. தற்போது 3 லட்சத்து ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஒன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவு குறைவு என்று சொல்லப்படுகிறது.

இந்தியா முழுவதும் 75 லட்சத்து 57 ஆயிரத்து 529 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரையில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை எண்பத்தி இரண்டு கோடியே 65 லட்சம் ஆக அதிகரித்திருக்கிறது. இதற்கிடையில் நேற்று 15 லட்சத்து 92 ஆயிரத்து 395 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுவரையில் 55.77 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருக்கிறது.