அதிர்ச்சி இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் நோய்த்தொற்று பரவல்! முகக்கவசம் கட்டாயம்!

0
106

நாட்டில் சமீப காலமாக மராட்டியம், கேரளா, போன்ற சில மாநிலங்களில் நோய்த்தொற்றுப்பரவல் அதிகரித்துவருகிறது. இதனடிப்படையில் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி 4,270 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,518 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

. நேற்று வெளியிட்ட அறிவிப்பினடிப்படையில், நோய்தொற்றுக்கு இதுவரையில் 15 பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 பேர் இந்த நோய்க்கு பலியாகியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

நோய்தொற்று பாதிப்புக்கு இதுவரையில் பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,24,701 என அதிகரித்திருக்கிறது. நோய் தொற்று சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 25,782 என இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2770 9 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள், நாட்டில் நேற்று மட்டும் 2,57,187 தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதுவரையில் நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக 194,12,87000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

Previous articleதமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!
Next articleநம்பி அனைத்தையும் ஒப்படைத்த முதலாளிக்கு துரோகம் செய்த தொழிலாளி! காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!