இலங்கையுடனான கடைசி ஒருநாள் போட்டி புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ராகுல் டிராவிட்! மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன்!

Photo of author

By Sakthi

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்று தற்சமயம் கணிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்சமயம் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இதற்கு முன்னரே இரண்டு போட்டியில் வெற்றி பெற்று விட்ட சூழலில், இன்றைய தினம் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்திய அணி பல புதுமுக வீரர்களை கொண்ட இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறது. இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அனுபவம் பெற்ற வீரர்களே முதல் இரண்டு போட்டிகளில் களமிறக்கப்பட்டார். புதிதாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்டோர் மட்டுமே அறிமுகப் படுத்தப்பட்டார்கள். இருந்தாலும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அந்த இரண்டு வீரர்களுமே அரைசதம் அடித்து அசத்தி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இதற்கு முன்னரே ௨-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருப்பதால் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் புதுமுக வீரர்கள் ஒரு சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இந்திய அணியில் இன்னும் ஒன்பது வீரர்கள் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது தொடர்பாக தற்சமயம் கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆட்டத்தின் தொடக்கத்தை பொறுத்தவரையில் ரிஷப்பை தவிர்த்து ருத்ராஜ் மற்றும் படிக்கல் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். ஆகவே இந்த முறை தவானுடன் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் அழைக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் படிக்கல் நல்ல பார்மில் இருப்பதன் காரணமாக, அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. முதல் விக்கெட்டுக்கு இளம் வீரர் இஷான் கிஷனே மீண்டும் களமிறக்க படலாம் என்றும் தெரிகிறது.

நடு வரிசையில் இந்த முறை மனிஷ் பாண்டேக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அழைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. நீண்ட தினங்களாகவே வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக ஜொலிக்கலாம் என்று இவருக்கு வாய்ப்பு கொடுக்கப் படலாம் என தெரிகிறது. அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 3-வது விக்கெட்டுக்கு கலைக்கப்படலாம் என்று சொல்கிறார்கள். ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தவரையில் மீண்டும் மணிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இவர்கள் கடந்த இரண்டு போட்டிகளிலும் மிகச் சிறப்பாக ஆடியதால் 3வது ஒருநாள் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாகர் அறிமுகப்படுத்தபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஷிகர் தவான், படிக்கல், இஷன் கிஷன், சஞ்சீவ் சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் குணால் பாண்டியா, தீபக் சஹர், புவனேஸ்வர் குமார், ராகுல் சாகர், குல்தீப் யாதவ், உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.