இந்திய அணியின் வீரர்களுக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கின்ற சூழ்நிலையில், அதை பெரிதாக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் இறங்கியிருக்கிறது பிசிசிஐ. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார்கள்.5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஒரு முக்கிய போட்டி நடைபெறுவதற்கு முன்னாள் இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாடுவது வழக்கமாக இருந்துவருகிறது இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக முதல் தர பயிற்சிப் போட்டியில் விளையாடாமல் இருந்ததே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அந்த நாட்டின் கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அந்த போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது பிசிசிஐ. அதாவது கவுண்டி அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான இந்த போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதி ஆரம்பமாகிறது. மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறும் அந்த போட்டிகள் துருகம் நகரத்தில் இருக்கின்ற எமிரேட்ஸ் ரிவர்சைட் என்ற மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை மூன்று முப்பது மணி அளவில் ஆரம்பமாகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை முடித்துக்கொண்டு இந்திய வீரர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் கொஞ்ச நாட்கள் இங்கிலாந்தை வலம் வந்து கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் எல்லோரும் தற்சமயம் நோய் தடுப்பு பரிசோதனை செய்யப்பட்டு துர்ஹா நகரத்திற்கு அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். அங்கே அவர்கள் பபுளில் ஒன்றிணைந்த பின்னர் அடுத்த கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கு இடையில் இந்திய அணியின் வீரர் ரிஷப் பண்ட் அவர்களுக்கு டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்று கொண்ட பின்னரே அவருக்கு இந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மீதம் இருக்கின்ற இந்திய வீரர்கள் மட்டும் இதில் பங்கேற்க இருக்கிறார்கள் அவர்களுக்கான பபுல் ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.