இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மூத்த வீரர் மணீஷ் பாண்டே செய்த தவறு இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் 2வது ஒருநாள் போட்டி ஆரம்பமானது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
போட்டி நடைபெற்ற பிரேமதாசா மைதானத்தில் எவ்வளவு விரைவாக விக்கெட்டுகளை கைப்பற்ற முயற்சிக்கிறோமோ அந்த அளவிற்கு சாதகமான சூழல் ஏற்படும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து இருந்தார்கள். முதல் போட்டியின் போது பவர்பிளே ஓவரில் இந்திய அணியின் வீரர்கள் எடுத்த விக்கெட்டுகள் தான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. ஆகவே இரண்டாவது போட்டியிலும் அதை திட்டத்தோடு இந்திய அணி களமிறங்கியது என சொல்கிறார்கள்.
இருந்தாலும் அதற்கு வேட்டு வைக்கும் விதமாக செயல்பட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கின்றார் மணிஷ் பாண்டே. டாஸ் வென்று பேட்டிங்கை ஆரம்பித்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அவிஷிங்கா மற்றும் மினோத் பானுகா ஆகிய ஜோடி சிறப்பாக அடித்தளத்தை போட்டு கொடுத்தது. சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. பனுகா 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இவர்களுடைய இந்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் முதல் இரண்டு ஓவர்களிலேயே இந்த பார்ட்னர்ஷிப் உடைந்து இருக்கவேண்டியதுதான். ஆனால் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தை அவிசிங்கா தடுப்பாட்டம் ஆட முயற்சி செய்தார். ஆனால் அது அவுட் சிங்காக வந்து பேட்டில் பட்டு கேட்ச் வாய்ப்பானது. வேகமாக வந்த அந்த பந்தை 2-வது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த மனிஷ் பாண்டே விழுந்து பிடிக்க முயற்சி செய்தும் பிடிக்க இயலாமல் போனது. இந்த கேட்ச் மிகவும் சிரமமான ஒன்று என்ற காரணத்தால், அவர் மீது யாரும் குறை சொல்லவில்லை.
ஆனாலும் அதற்கு அடுத்த ஓவரிலேயே பிடிக்க வேண்டிய கேட்சை தவற விட்டார் மனிஷ் பாண்டே. இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை தீபக்சாகர் வீச பேட்ஸ்மேன் தடுப்பாட்டம் ஆடினார். அந்த சமயத்தில் பந்து மீண்டும் 2-வது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த மனிஷ்பாண்டியவிடம் சென்றது .அந்த சமயத்தில் மிகவும் அசால்டாக அந்த கேட்சை பிடிக்காமல் விட்டு விட்டார். அவர் விட்ட கேட்ஸின் விளைவாக இலங்கை அணி முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்து வலுவான நிலைக்கு சென்றுவிட்டது. இதன் காரணமாக, மனிஷ் பாண்டேவை ரசிகர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.