அஸ்தமனமாகும் ஹர்டிக் பாண்டியா கிரிக்கெட் வாழ்க்கை!

0
110

ஹர்திக் பாண்டியா அவை இனி வருங்காலங்களில் அணியில் சேர்த்துக் கொள்ளலாமா என்பது தொடர்பாக தீர்ப்பு கூறுவது யோசித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய ஏ அணி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறது இதில் ஏற்கனவே ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்திய அணி.

டி20 உலகக் கோப்பைக்கான வீரர்கள் தேர்தலை மனதில் வைத்து இலங்கை தொடர் ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்ற 2019 ஆம் வருடம் காயம் காரணமாக, பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் இருந்து பெரிய அளவில் விலகி இருக்கிறார். இவர் பந்து வீச இயலாது என்று தெரிவித்த காரணத்தால், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆகவேதான் இலங்கை தொடரை அவர் பயன்படுத்திக் கொண்டால் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க வைக்கலாம் என்று தேர்வு குழு யோசித்ததாக சொல்லப்படுகிறது.

இருந்தாலும் இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மிக மோசமாக அவர் விளையாடியிருக்கிறார். மறுபடியும் பந்துவீச்சு செய்தாலும் அதில் பெரிய அளவிலான தாக்கம் எதுவும் இல்லை. இரண்டு போட்டிகளையும் சேர்த்து 9 ஓவர்களில் மட்டுமே அவர் பந்து வீசி இருக்கிறார். அதோடு அவர் 54 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே அவர் கைப்பற்றியிருக்கிறார் அதிலும் குறிப்பாக 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 ஓவர்களை வீசி அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 20 ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவற்றை தவிர்த்து பேட்டிங்கிலும் ஹர்டிக் பாண்டியா மிக மோசமாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய சூழல் அமையாவிட்டாலும் இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் சரிவில் இருந்த இந்திய அணியில் மீட்டெடுக்க வேண்டும் என்ற முக்கியமான பொறுப்பு அவரிடம் இருந்தது. ஆனாலும் இரண்டாவது பந்திலேயே அவுட்டாகி அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தார் தவறான ஷாட்டை அடிக்க முற்பட்ட சமயத்தில் இலங்கை அணியின் கேப்டன் கேட்ச் செய்து அவரை வெளியேற்றினார்.அவருக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளிலும் அவர் பெரிய அளவில் தன்னை நிரூபிக்கவில்லை தற்சமயம் அவர் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்.