ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
151

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி இதுவரையில் மூன்று போட்டிகள் முடிவடைந்த இருக்கின்ற நிலையில், நான்காவது கிரிக்கெட் போட்டி சென்ற 15 ஆம் தேதியிலிருந்து பிரிஸ்பேன் காபா போன்ற மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது போட்டியில் இந்திய வீரர்கள் அஸ்வின், ஜடேஜா, ஆகியோர் காயம் அடைந்து இருப்பதால் இப்பொழுது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நடராஜன் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் நான்காவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார்கள்.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 274 ரன்கள் சேர்த்தது இதனை தொடர்ந்து இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய அணி எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 369 ரன்கள் சேர்த்தது. இதில் லபுசக்னே108 , பெய்ன் 50 கிரீன் 47 அதோடு வேட் 45 போன்ற இடங்களில் குவித்திருக்கிறார்கள் இதனைத் தொடர்ந்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்து இருக்கிறார்கள்.

இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 44 மற்றும் சுப்மன் கில் ஏழு சேர்த்திருந்தார்கள் ஆனாலும் இரண்டாவது உணவு இடைவேளைக்கு பிறகு மழை குறுக்கிட்டதால் ,இரண்டாவது தின போட்டி முழுவதுமாக ரத்தானது. அடுத்து மூன்றாவது நாள் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் பெரிய அளவில் ரன் எடுக்காமல் தங்களுடைய விக்கெட்டை இழக்க ஆரம்பித்தார்கள். இதில் புஜாரா 25 பண்ட் 23 மயங்க் அகர்வால் 38 அதோடு ரகானே 37 ரன்கள் சேர்த்து இருந்தார்கள்.

கடைசியாக இந்திய அணி 111.4 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் இறுதியில் 6 ஓவர்கள் மட்டும் பேட்டிங் செய்து 21 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 194 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் வார்னர் 48 ரன்கள் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் 55 ரன்கள் எடுத்து இருக்கிறார்கள். இந்திய தரப்பில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கின்றார்.

ஆகவே இந்திய அணிக்கு வெற்றி பெறுவதற்கு 328 ரன்கள் தேவை என்ற இலக்கை இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இதில் ரிஷப் பண்ட் 56 ரன்களும் 89 ரன்களும் மற்றும் சுப்மன் 91 ரன்கள் எடுத்திருந்தார். பொறுமையாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார் இவர். இதன் மூலமாக இந்திய அணி2-1 என்று டெஸ்ட் தொடரை வென்று அசத்தியிருக்கிறது. இந்திய அணியின் இந்த வெற்றி பலருடைய பாராட்டுக்களையும் பெற்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றார்கள்.

Previous articleமைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஆசாமி கைது கொடைக்கானலில் பரபரப்பு!
Next articleமத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு – ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!