india vs south africa t20:இந்தியா- தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
தென் ஆப்பிரிக்காவின் டி 20 கிரிக்கெட் போட்டிக்கான நான்கு நாட்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. இந்த டி 20 கிரிக்கெட் தொடரானது 4 சுற்றுகளாக நடைபெறும், முதல் மூன்று போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு டி20 கோப்பை வழங்கப்படும். முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
அடுத்து மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது . இதனால் 2:1 என்ற ஆட்டங்களை வென்றது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா. இந்த நிலையில் இறுதி போட்டியில் வென்று ஆக வேண்டும் என்று இந்தியா களம் இறங்கியது. தென் ஆப்பிரிக்கா இந்த இறுதி போட்டியில் வென்று இரு அணிகளும் சமமான புள்ளிகளை பெற வேண்டும் என்ற கட்டாய நோக்கில் களத்தில் இறங்கியது.
இந்த இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தார். 20 ஓவரில் 283 ரன்கள் பெற்று இருந்தது, ஆனால் ஒரு விக்கெட் இழப்பு மட்டும் இந்தியா பெற்று இருந்தது. இந்திய அணியில் திலக் வர்மா 120 ரன்கள் குவித்து இருந்தார்.
சாம்சன் 109 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பலம் சேர்த்தார். ஆனால் தென் ஆப்பிரிக்கா அணி 18.2 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது, அந்த அணியின் அனைத்து வீரர்களும் ஆல் அவுட் ஆனார்கள். இதனால் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மேலும் டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை வென்றது இந்திய அணி.