இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! பேட்டிங்கை செய்த இந்திய அணி!

Photo of author

By Sakthi

இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது இதனைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதனடிப்படையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று ஆரம்பமானது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்ற காரணத்தால், இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. விராட்கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின்னர் ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அவருடைய தலைமையில் இந்திய அடியெடுத்து வைக்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்டிப்படையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் விபரம் வருமாறு, இந்தியாவைப் பொறுத்தவரையில் ரோகித் ஷர்மா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அதேபோல இலங்கை அணியின் வீரர்கள் பெயர்கள் வருமாறு, கருணாரத்னே லஹிரு திரிமன்னே,பதும் நிஸ்ஸங்க,சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, சுரங்க லக்மால் விஷ்வ பெர்னாண்டோ லசித், லகிரு குமாரா அலி டோ இலங்கை அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.