டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு!!! இன்றைய போட்டியில் களமிறங்கும் சுப்மான் கில்!!! 

0
33
#image_title
டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு!!! இன்றைய போட்டியில் களமிறங்கும் சுப்மான் கில்!!!
இன்று(அக்டோபர் 14) நடைபெறும் உலகக் கோப்பை தொடர் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மேலும் இந்திய அணியில் சுப்மான் கில் அவர்கள் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார்.
நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்14) நடைபெறும் லீக் சுற்றில் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான். அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டி இன்று(அக்டோபர்14) மதியம் 2 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த பெட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் இந்தியா விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சுப்மான் கில் விளையாடவில்லை.
டெங்கு காய்ச்சல் பாதித்ததால் சுப்மான் கில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் குணமடைந்தததை அடுத்து அவர் குஜராத் விரைந்து இந்திய அணியுடன் இணைந்தார். அதன் பிறகு சுப்மான் கில் அவர்கள் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பெட்டியில் சுப்மான் கில் அவர்கள் விளையாடவுள்ளார்.  ஆனால் சுப்மான் கில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பொழுது அவர் உலகக் கோப்பை தொடர்பு முதல் மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன்…
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மான் கில், விராட் கோஹ்லி, கே.எல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்தல் தக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ்
பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன்…
பாபர் அசம்(கேப்டன்), அப்துல்லா சப்பிக், இமாம் உல் ஹக், முகம்மது ரிஷ்வான்(விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்டிகர் அஹமத், சதாப் கான், மொகம்மது நவாஷ், ஹசன் அலி, ஷாகீன் அப்ரிடி, ஹரிஸ் ராவுப்