இந்தியன் 2 படம் பார்த்தவர்களுக்கு 20 சதவீதம் டிஸ்கவுண்டில் ஹெட் மசாஜ்! டிக்கெட் அவசியம் என அறிவிப்பு! 

Photo of author

By Sakthi

இந்தியன் 2 படம் பார்த்தவர்களுக்கு 20 சதவீதம் டிஸ்கவுண்டில் ஹெட் மசாஜ்! டிக்கெட் அவசியம் என அறிவிப்பு!
கடந்த வாரம் வெள்ளிக் கிழமை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்துவிட்டு மனஅழுத்தம் ஏற்பட்ட நபர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியில் ஹெட் மசாஜ் செய்யப்படும் என்று அழகு நிலையம் ஒன்று அறிவித்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை(ஜூலை12) இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், நெடுமுடி வேணு, விவேக், பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங், மனோ பாலா என பலர் நடித்திருந்தனர்.
அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முற்றிலும் சிதைத்துவிட்டது என்று கூறலாம்.
இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்தியன் 2 பார்த்து மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் ஹெட் மசாஜ் செய்யப்படும் என்று அழகு நிலையம் ஒன்று அறிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தின் தாந்தோணி மலையில் உள்ள “ஸ்டுடியோ 7 ஃபேமலி சலூன் அன்ட் ஸ்பா” என்ற அழகு நிலையம்தான் தற்பொழுது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அழகு நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இந்தியன் 2 திரைப்படத்திற்கு சென்று அதை பார்த்து மன அழுத்தத்தை அதிகப்படுத்திய நபர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி விலையில் ஹெட் மசாஜ் செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.
மசாஜ் செய்ய வரும் நபர்கள் அனைவரும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு சென்றதற்கான டிக்கெட்டையும் கொண்டு வர வேண்டும் என்றும் அந்த அழகு நிலையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விநோதமாக இருந்தாலும் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் ரசிகர்களுக்கு மத்தியிலும் மக்கள் நீதி மையம் கட்சியினருக்கு மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இதையடுத்து இந்த அறிவிப்பு தொடர்பாக ஸ்டுடியோ 7  அழகு நிலையத்தின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது “இந்த அறிவிப்பு ரோட்டரி கிளப் அணி வாட்ஸ்ஆப் குரூப்பில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் வழங்கப்படுகின்றது” என்று கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.