அமெரிக்க நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட இந்தியர்!

Photo of author

By Sakthi

அமெரிக்க நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட இந்தியர்!

Sakthi

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது.

இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி அருண் சுப்பிரமணியன் என்ற சிறப்பை அவர் பெறுவார்.

2006 முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ருத் பேடர் கின்ஸ்பெர்க்கின் சட்ட எழுத்ததாக பணியாற்றினார்.

அமெரிக்க மாவட்ட நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அருண் சுப்பிரமணியனுக்கு தேசிய ஆசிய அமெரிக்க பார் அசோசியேசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறது.