தற்சமயம் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து உடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அது வரலாற்று சாதனையாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், 4 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இதுவரையில் நடைபெறவில்லை அந்த போட்டி நடந்தால் அதில் வெற்றி பெறும் அணி தான் தொடரை கைப்பற்றும் என்று கூறுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.
பிசிசிஐ அறிவித்திருக்கும் அணியில் விராட் கோலி தலைமை ஏற்க இந்திய அணியின் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா,கே.எல்.ராகுல் ரிசப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செயல்படுவார் என்று பிசிசிஐ துணை தலைவர் ஜெய் ஷா தெரிவித்து இருக்கின்றார்.
அதோடு புவனேஸ்வர் குமார்,பும்ரா, முகமது ஷமி உள்ளிட்டோர் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ,உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இந்தநிலையில், ஐபிஎல் போட்டியில் சிறந்து விலங்கிய மிகத் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷன் கிஷன் உள்ளிட்டோரும் இந்த அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.