இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! புதிய கேப்டனான 360 டிகிரி பேட்ஸ்மேன்! 

Photo of author

By Sakthi

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! புதிய கேப்டனான 360 டிகிரி பேட்ஸ்மேன்!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக சூர்யக்குமார் யாதவ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது. இதையடுத்து இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதையடுத்து தற்பொழுது ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் விராட் கோஹ்லி அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரிடம் அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் அக்பர். பட்டேல், கலீல் அஹமது ஆகியோருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யக்குமார் யாதவ் அவர்கள் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக செயல்பட்ட சுப்மான் கில் டி20 தொடருக்கும் ஒரு நாள் தொடருக்கும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி…
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மான் கில்(துணை கேப்டன்), விராட் கோஹ்லி, கே.எல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், அர்ஷதீப் சிங், ரியான் பராக், அக்சர் பட்டேல், கலீல் அஹமது, ஹர்சித் ராணா
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி…
சூர்யக்குமார் யாதவ்(கேப்டன்), சுப்மான் கில்(துணை கேப்டன்), சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்சிவால், ரியான் பராக், ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, சிவம் தூபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷதீப் சிங், கலீல் அஹமது, முகமது சிராஜ், ரவி பிஷ்நோய்
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முன்று டி20 போட்டிகளும் பல்லகெலே ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றது. அதன் படி முதல் டி20 போட்டி ஜூலை 27ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜூலை 28ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜூலை 30ம் தேதியும் நடைபெறுகின்றது.
அதே போல இந்தியா மற்றும் இலங்கை மோதும் மூன்று ஒருநாள் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகின்றது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 2ம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 7ம் தேதியும் நடைபெறுகின்றது.