இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாட்ஸில் நேற்று நடந்தது. இதில் டாஸ் என்ற இந்திய அணி தேர்வு செய்தது. அதனடிப்படையில், முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது, மொயின் அலி 47 ரன்களும் டேவிட் வில்லே 41 ரன்களும் ஜேனி 38 ரண்களும் சேர்த்தனர்.
இந்திய அணியின் சார்பாக சாகல் 4 விக்கெட்டுகளையும், பும்ரா, ஹர்திக் பாண்டியா, உள்ளிட்டோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் சாய்த்தனர் இதனை தொடர்ந்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த இலக்கை இந்திய அணி எளிதாகவே எடுத்து வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
ஆனாலும் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா வந்தவுடனே டக் அவுட் ஆகி அதிர்ச்சியை வழங்கினார். அதன் பிறகு தான் ஒன்பது ரன்களிலும் விராட் கோலி 16 ரங்களிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் டக்கவுட் செய்யப்பட்டார். விராட் கோலி 16 ரன்னில் வெளியேறினார் அடுத்ததாக வந்த இந்திய வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
கடைசி சமயத்தில் சூரியகுமார் யாதவ் 27 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, 29 ரன்கள், 23 ரன்கள், உள்ளிட்ட இலக்கை எட்டி ஓரளவு இந்தியாவிற்கு உதவி புரிந்தார்கள், கடைசியில் இந்திய அணி 146 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட் பறிகொடுத்தல் இதன் மூலமாக 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பாக டோப்லே 6 விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்திய அணியின் வீரர்கள் சில மோசமான ஷாட்களை தேர்வு செய்து விளையாடியது தங்களுடைய விக்கட்டை பறிகொடுக்க முக்கிய காரணமாக, அமைந்தது. இந்த வெற்றியின் மூலமாக ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமலில் இருக்கிறது இறுதி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.