பும்ரா தலைமையில் இந்திய அணி… அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்…
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அயய்லாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றது. அயர்லாந்து மற்றும் இந்தியா மோதும் டி20 தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகின்றது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலாயாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் பொழுது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். இந்நிலையில் 11 மாதங்கள் ஓய்வு முடிந்து ஜஸ்பிரித் பும்ரா விளையாடும் முதல் தொடர் இகுவாகும்.
அதுமட்டுமில்லாமல் ஓய்வு முடிந்து அணிக்கு திரும்பியவுடன் இந்திய அணிக்கு கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அயர்லாந்து டி20 தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங், ருத்ராஜ் கெய்க்வாட், ஜிதேஷ் சர்மா, ஷிவம் தூபே, திலக் வர்மா ஆகியோர் இருப்பதும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
மேலும் பும்ராவை போல காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அவர்களும் சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் இந்த தொடரின் மூலமாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகம் அக வாய்ப்பு உள்ளது.
அயர்லாந்து அணியை பொறுத்தவரை ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடிய பந்துவீச்சாளர் ஜோஸ்வா லிட்டில் அயர்லாந்து அணியில் உள்ளார். மேலும் ஹேரி டக்டர், லார்கன் டக்கர், ஜார்ஜ் டாக்ரெல் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று(ஆகஸ்ட்18) இரவு 7.30 மணிக்கு டப்ளின் மைதானத்தில் தொடங்குகின்றது.