இரண்டு பேரால் காப்பாற்றப்பட்ட இந்திய அணி!! 202 ரன்கள் குவித்தது எப்படி?
T20 ipl போட்டிகளில் சி.எஸ்.கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக பங்கேற்பவர்தான் ருதுராஜ் கெயிக்வாட். இவரது தலைமையில் தற்போது ஆசிய ஒலிம்பிக் t20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ்க் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் அவரே களமிறங்கினார். மற்றொருபுறம் ஜெய்ஷ்வால் களமிறங்கினார்.
ஆரம்பத்திலேயே ஜெயஸ்வால் அவர்கள் 6,4 என அடிக்க ஆரம்பித்து விட்டார். ருதுராஜ் கெயிக்வாட் மெல்லமாகத்தான் ஆடத் தொடங்கினார். இவர் 23 பந்துகளில் வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து திலக் வர்மா 2 ரன்களும் ஜிதேஷ் சர்மா 5 ரன்களும், சிவம் துபே 25 ரன்களை எடுத்து சேர்த்தார்.
இதையெல்லாம் பார்த்த பிறகு இந்திய அணியானது நேபாளம் அணியிடம் நிச்சயமாக தோற்று விடும் என்ற அச்சம் அனைவருக்கும் தோன்றியது.
இதனை தொடர்ந்து கடைசியாக களமிறங்கிய ரிங்கு சிங் மற்றும் ஆரம்ப ஆட்டநாயகனாக திகழ்ந்த ஜெய்ஸ்வால் மட்டுமே நிலைத்து நின்று ஆடி கடைசி வரை இப் போட்டியை வெற்றிக்கு எடுத்துச் சென்றனர்.
ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் சதம் அடித்து தெறிக்க விட்டார். மேலும் ரிங்கு சிங் 12 பந்துகளில் 2போர்,4 சிக்ஸ் அடித்து அதிரடி காட்டி இந்திய அணிக்கு மாபெரும் பலத்தை சேர்த்தார்.
இவர்கள் இருவரின் பேட்டிங் திறமையின் காரணமாகத்தான் இந்திய அணியானது நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.